Friday, March 19, 2010

உதவி இயக்குநர் - எம்.எஸ்.எம்.றிஸ்வி

Categories:

பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கிழக்கிலங்கையில் சிறுபராயம் முதலே மிகப் பிரபல்யம் பெற்ற கலைஞர். பல மேடை நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

பின் நாட்களில் மேடை நாடகங்கள் பலவற்றுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி நடித்து அதனால் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு வசதிகுறைந்த பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் பொருளாதார ரீதியில் பெரிதும் உதவியவர் என்பதே இவரது கலை அர்ப்பணிப்புக்கும், சமூக சேவைக்கும் சிறந்த சான்று.

கலைத் தாகத்தால் காலப் போக்கில் வீடியோ நாடகங்கள், குறுநாடகங்கள் பலவற்றுக்கும் கதை வசனம் எழுதி, இயக்கி ஒளிப்பதிவு செய்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கலைத்துறையில் அதீத ஈடுபாடு, ஆழ்ந்த அறிவு மற்றும் பக்தி கொண்டவர் என்பதும் குறிக்கோளுடன் அத்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருபவர் என்பதும் சிறப்பு.

ரி.எம்.சௌந்தராஜனின் கனீரென்ற கம்பீரமான குரலில் மிக மிக அற்புதமாகப் பாடி மக்களை ஆச்சரியப்படுத்தியர்! ஆச்சரியப்படுத்தியவர்! ஆச்சரியப்படுத்திக் கொண்டிருப்பவர்! என்பது அதனையும் விட சிறப்பானது.

இவர் பாடும் போது மக்கள் ஒருகனம் உரைந்து நிற்பவர் றிஸ்விதான் பாடுகிறார். என்பதை மறுத்து ரி.எம்.எஸ் இன் பாடலை பின்னணியான ஒலிக்க விட்டு விட்டு இவர் அதற்கேற்ப வாயசைக்கிறார் என்றே அடித்துச் சொல்வார்கள்.

அடுத்த கனம் நெரிசலைக் கிழித்துக் கொண்டு இவரின் கிட்ட நெருங்கி நின்று அவதானித்து பின் வாயில் விரல் வைத்து அவர்கள் அதேகனம் திகைத்து நிற்பர் என்பது இவரின் தனிச்சிறப்பு என்றால் அது மிகையல்ல!

அந்த அளவுக்கு இவரின் குரல், உச்சரிப்பு, மொழிப் பயன்பாடு, பாணி, பாவம், ஏற்ற இரக்கம், சுருதி என அனைத்துமே அற்புதம்.

இப்படி பாடகர், கவிஞர், எழுத்தாளர், கலைஞர், சமூக சேவையாளர் எனப் பல அவதாரம் கொண்டு மக்களி;ன் ஏகோபித்த அபிமானம் கலைஞரே எம்.எஸ்.எம்.றிஸ்வி.

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "உதவி இயக்குநர் - எம்.எஸ்.எம்.றிஸ்வி"

Post a Comment

  • Hai Wel Come Our Webside.. Coming Soon... THE RATE BOY.. Tamil film.