Friday, March 19, 2010

இயக்குநர் - மஹ்ரூப்

Categories:


உயர்தரம் கற்று, இலத்திரனியல் துறையில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார். பின், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத் தொழில்நுட்ப பயிற்சியைத் தொடர்ந்தார். அதேகனம் திரைப்படத் தயாரிப்புத் தொழில்நுட்ப டிப்ளோமா படிப்பை நிறைவு செய்ததன் மூலம் திரைப்படத்துறைக்குள் கால்பதித்தார்.

அதன்மூலம் இவர் திரைப்படத்துறையில் சாதாரணமாக இன்றி தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், பரிசோதகராகவும் தன் ஆரம்பப் பணியைத் தொடங்கினார் என்றால் அது மிகையல்ல. அப்படி உயர் பணியுடனே தன் திரையுலகப் பிரவேசத் தொடர்ந்த இவரின் கை வண்ணத்திலேயே தான் இன்று இந்த த ரேட் போய் தயாராகியிருக்கிறது.

தனது கதை, திரைக்கதை, வசனத்திலும், இயக்கத்திலும் தயாரான கறுப்புக் கனவுகள் என்ற தன் முதற் திரைப்படத்தின் ஒளிப்பதிவை முடித்து விட்டு த ரேட் போய் என்ற தன் 2ஆவது திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார். அதற்காக கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு போன்ற பணிகளையும் தானே மேற்கொண்டார்.

இலங்கைத் திரைத்துறை வரலாற்றில் குறிப்பாக தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் த ரேட் போய் பாரிய திருப்பங்களையும், மாற்றங்களையும் உண்டு பண்ணும் என்று திடமாகக் கூறுகிறார். உண்மையில் அப்படி எதிர்பார்க்கலாம், காரணம் இதன் கதை, காலச்சாரம் எனப் பல இலங்கைத் திரைத்துறையில் புதியன எனலாம்.

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிவரும் இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தென்றல் எவ்.எம் இன் திரைத்தென்றல் என்ற சர்வதேசத் திரைப்படத்துறை நிகழ்ச்சி ஒன்றிணையும் வழங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "இயக்குநர் - மஹ்ரூப்"

Post a Comment

  • Hai Wel Come Our Webside.. Coming Soon... THE RATE BOY.. Tamil film.