Friday, March 19, 2010

THE RATE BOY

Categories:

மேற்கே முறையே கொழும்பு, மொனராகலையிலிருந்து வடக்கே கல்முனை, அக்கரைப்பற்றிலிருந்தும் வந்தப்படி கிழக்கிலங்கையில் பொத்துவில் நகரில் ஒன்றிணையும் பிரதான வீதி அண்மையில் அகலமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ்விதி தென்பக்கமாக பொத்துவில்லூடாக பாணமை வரை சென்று நிறைவுறுகின்றது.

பிரதான வீதி வழியாக பொத்துவில் நகரில் நுழையும் போது முதன் முதலில் அப்பாதையின் இடது புறத்தே கிறிஸ்தவ தேவாலயம், அதிலிருந்து அப்பிரதான வழியாக 200 மீற்றர் முன்னே நகரின் உள் நோக்கிச் செல்ல வலது புறத்தே ஆலையடி பிள்ளையார் தலமும், அதிலிருந்து மேலும் 200 மீற்றர் முன்னே செல்ல புத்த பெருமான் வீற்றிருக்கும் அரச மரத்து ஆலயமும், மேலும் 200 மீற்றர் முன்னே செல்ல நகரின் பொதுச் சந்தைப் பள்ளிவாசளை ரஹ்மானியா பள்ளிவாசலும் என இயற்கையாகவே சிறப்பாக அமைந்து, நான்கு மதங்களையும் பின்பற்றி வாழும் இப்பிரதேச மக்களை மேலும் அன்னியோன்யப்படுத்திக் கொண்டிருக்கின்றமை பொத்துவில்லுக்குத் தனிப் பெருமையாகும்.

இங்குதான் த ரேட் போய் படப்பிடிப்பு இடம்பெற்றது.

இது பொத்துவில் கடற்கரை, மண்மலை, களப்புக்கட்டு, பொதுச்சந்தை, பிரதான வீதி போன்ற இடங்களில் படப்பிடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் வாழ் மக்களும், மஹ்ரூபின் த ரேட் போய் திரைப்படமும்..

ஆரம்பத்தில் இதன் படப்பிடிப்பிற்கு இப்பிரதேச மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர் எனலாம். காரணம் திரைப்படம் பற்றிய அவர்கள் கணிப்பீடு வேறு விதம் என்றே எண்ணத்தோன்றுகிறது. காரணம் இன்றைய திரைப்படங்கள் அந்தப் போக்கை மக்கள் மனதில் விதித்துள்ளன என்பதே உண்மை.

ஆனால் மஹ்ரூபின் த ரேட் போய் திரைப்படம் அதேகனம் அந்நக்கணிப்பீட்டை அவர்கள் மத்தியில் தவிடு பொடியாகிவிட்டது என்பதே நிஜம்.

ஆரம்பத்தில் எந்தவித ஒத்துழைப்பு வழங்காமல் தூர இருந்து ஓரக்கண்ணால் நோக்கிய இவர்கள் இதன் கதையமைப்பு, கதையோட்டம், கலாசாரம் போன்றவற்றைக் கண்டு பிரம்மித்து நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் மக்களுக்கு குறி;ப்பாக இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் வெளிப்படுத்தும் கருத்து அவர்களைப் படப்பிடிப்பின் போதே கவர்ந்துவிட்டது. மறுகனமே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு உதவுவதற்கென்றே ஒரு குழுவினர் உடனே உசாராகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு நிறைவுறும் வரை பாரிய ஒத்துழைப்பை பலரும் வழங்கினார்கள். இப்போது இத்திரைப்படம் எப்போதும் வரை என்ற பலத்தை எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றார்கள் என்பதே இதன் வெற்றிச்சான்று! இது தவிர நடிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கும்படி இப்பிரதேச இளைஞர்களும், வாலிபர்களும் இயக்குநரிடம் சந்தர்ப்பம் கேட்டு நின்றதும் அவர்களின் மாற்று சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு!

சூரியன் உதயமாகும் கிழக்கிலங்கையின் வங்கால விரிகுடாக்கடல்! சர்வதேச உல்லாசப் பயணிகளின் உரைவிடம்! உள்ளுர் மக்களின் பொழுது போக்கு! அறுகம்பை என அழைக்கப்படும் அழகின் சிகரம்!

மணல் கொண்டு இயற்கையாகவே மலைபோல் அமைந்துள்ளதால் மண்மலை என அழைக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் அக்கம் அத்சயிக்கும் இடமாகவும், அழகியவை கண்முன் நிறுத்தும் அமைவிடமாகவும் இது நிகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆரம்பக்காலத்தில் தற்போதை விடவும் இம்மண்மலை உயரமாகக் காணப்பட்டதும், தற்போது அதன் உயரம் குறைந்துள்ளதும் கவலையளிக்கிறது. இவ்விடயத்திலுள்ள மலை மனிதர்களால் அள்ளப்பட்டுச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்!

அறுகம்பைக் களப்பு என அழைக்கப்படும் இது சர்வதேச பெயர் பெற்ற ஒரு குடா. இக்களப்பை அண்மித்து இருமரங்கிலும் மக்கள் குடியிருப்பு அமைந்துள்ளதுடன், இப்பகுதி மக்களின் மீன்பிடித் துறைமுகமாகவும் திகழ்கிறது.

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "THE RATE BOY"

Post a Comment

  • Hai Wel Come Our Webside.. Coming Soon... THE RATE BOY.. Tamil film.